TikTok நிறுவனத்தின் 2024 முதல் காலாண்டுக்கான சமூக வழிகாட்டல் அமுலாக்கல் அறிக்கை வெளியீடு
TikTok தனது சர்வதேச பயனாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஒன்றை உருவாக்கும் நோக்கில் புதிய தரவுப் புள்ளிகள் மற்றும் பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு 2024 முதல் காலாண்டுக்கான சமூக வழிகாட்டல் அமுலாக்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், TikTok நிறுவனம் உலகளவில் 166,997,307 வீடியோக்களை அகற்றியது, இது பதிவேற்றிய அனைத்து வீடியோக்களில் 0.9% ஆகும். இவற்றில் கணிசமான பகுதி, 129,335,793 வீடியோக்கள், தன்னியக்க கண்டறிதல் தொழில்நுட்பங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன. அதே நேரத்தில், 6,042,287 வீடியோக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு மீண்டும் பதிவேற்றப்பட்டன.
இது தவிர, TikTok தனது சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக முதல் காலாண்டில் 976,479,946 வீடியோ கருத்துகளை (Comments) நீக்கியது. இது குறித்த காலப்பகுதியில் வெளியிடப்பட்ட மொத்த வீடியோ கருத்துகளில் 1.6% ஆகும். அத்துடன், அந்தக் காலப்பகுதியில் வீடியோ கிரியேட்டர்கள் விரிவான கருத்துப் பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தி 3,381,646,722 கருத்துக்களை அவர்களின் வீடியோக்களில் இருந்து நீக்கினார்கள்.
இந்த வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தைக் கண்டறிய, TikTok நிறுவனம் உயர் தொழில்நுட்பத்தையும் சேவைக் குழு ஒன்றையும் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் அவர்கள் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார்கள், அதில் அவர்கள் நீக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் கணக்குகளின் விபரங்களை வழங்குவார்கள்.
மேலும், TikTok நிறுவனம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலை (CSEA) எதிர்த்தும், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் (CSAM) பகிர்வை எதிர்த்தும் stand-alone report என்ற புதிய சுயாதீன அறிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கு தீங்கு செய்ய முற்படுபவர்களுக்கு பாதுகாப்பற்றது என்பதை தெரியப்படுத்தும்.
இதேவேளை, TikTok இன் வெளிப்படைத்தன்மை மைய இணையதளத்தில் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பெறலாம். TikTok இன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள், கருவிகள் மற்றும் கொள்கைகள் பற்றி மேலும் அறிய விரும்பினால், அவர்களின் சமூக வழிகாட்டுதல்களைப் பார்வையிடுங்கள்.
(மொஹமட் ரிஷாட்)