அம்பாறை மாவட்டத்தில் நூகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் அபாரம் விதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 59 வர்த்தகர்களுக்கு நீதி மன்றங்களினால் 2,20,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்தாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார தெரிவித்தார்.
அக்கரைப்பற்று,கல்முனை,சம்மாந்துறை,பொத்துவில்,அம்பாறை, தெஹியத்தக்கண்டிய ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோஸ்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 100 வர்த்தகர்கள் கண்டுபடிக்கப்பட்டு இதில 59 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்தமை, நுகர்வோர் நலன் கருதி விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, காலவதியான மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றியமை, மின் உபகரணங்களின் கட்டுறுதிக் காலத்தினை வழங்காமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கே இவ்வாறு நீதிமன்றங்களின் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)