ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டிற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2024/2025 நடைபாண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 2024 ஜூலை 13ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் என் எம் அமீன் தலைமையில் கொழும்பிலுள்ள அஷ்ஷபாப் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது முக்கிய பதவிகளுக்கான தெரிவுகளும் இடம்பெற்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 ஆவது வருடாத பொதுக்கூட்டம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது என். எம். அமீன் போரத்தின் தலைவராகவும் என் ஏ எம் ஸாதிக் ஷிஹான் பொதுச் செயலாளராகவும் கியாஸ் ஏ புகாரி பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது ஏனைய முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெற்றது.
இதற்கமைய, உப தலைவர்களாக :- எம் ஏ எம் நிலாம், எம் எம் ஜெஸ்மின் மற்றும் எம் எப் ரிபாஸ் ஆகியோரும், தேசிய அமைப்பாளராக இர்ஷாத் ஏ காதர், உப செயலாளர்களாக ஷம்ஸ் பாஹிம், ஷமீஹா சபீர், உப பொருளாளராக ஏ எச் எம் பௌஸான், பத்திரிகை ஆசிரியராக ஏ கே எம் றம்ஸி, இணைய ஆசிரியராக எம் ஐ நிஸாமுடீன், பயிற்சி பொறுப்பாளராக ஜாவிட் முனவ்வர், ஊடக இணைப்பாளராக அஷ்ரப் ஏ ஸமத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதுதவிர, திருமதி புர்கான பீ இப்திகார், ஷிஹார் அனீஸ், ஏ ஏ எம் ரிப்தி அலி, மௌலவி எஸ் எம் எம் முஸ்தபா, ஏ பி எம் அஸ்ஹர், அதீபா தௌஸீர் மற்றும் பரீட் இக்பால் ஆகியோர் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் ஆலோசகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் நியமனங்களும் இதன்போது இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வழிகாட்டல், திறன் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை முன்னெடுக்க மேற்படி முதலாவது நிறைவேற்று குழு கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற போரத்தின் 27 ஆவது வருடாத மாநாட்டின் போது தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உட்பட 18 பேர் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன், போரத்தின் யாப்பில் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் எம் எம் ஜெஸ்மின், திருமதி புர்கான பீ இப்திகார் மற்றும் ஏ எச் எம் பௌஸான் ஆகியோர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.