கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய மூன்று மாடி கட்டிட நிர்மாண பணி தொடக்கம்..!
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சின் 4.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்- அஸ்கர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான தொடக்க நிகழ்வு இடம்பெற்றது.
கல்முனை கமு/கமு/அஸ்கர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான கட்டிட அனுமதி கடிதத்தை பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்ததுடன் கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளர், இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
154 வருட வரலாற்றையும், அதிக மாணவர்கள் தொகையையும் கொண்ட இந்த பாடசாலைக்கு தேவையாக இருந்த இக்கட்டிடத்தை குறுகிய காலத்தில் கட்டி முடிக்க தேவையான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(நூருல் ஹுதா உமர்)