விம்பிள்டன் டென்னிஸ் தொடர்; நட்சத்திர வீரரான ஜெக்கோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் கார்லேஸ் அல்கராஸ்
விம்பில்டன் சம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் முன்னால் சம்பியனான சேர்பியாவின் நவோக் ஜெக்கோவிச்சை 6:2,62, 7:6 என்ற நேர் செட்களில் வீழ்த்திய ஸ்பெய்னின் கார்லேஸ் அல்கராஸ் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டார்.
உலகின் புகழ் பெற்ற டென்னிஸ் தொடரான விம்பில்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. இத் தொடர் கடந்த ஜுன் மாதம் 24ஆம் திகதி ஆரம்பித்து இன்று வரை இடம்பெறவுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் , இரட்டையர், மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் களப்பு இரட்டையர் என 5 பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னனி வீரர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
அதற்கமைய முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் லெரன் முசட்டியை எதிர்த்தாடினார் செர்பியாவின் நவோக் ஜெக்கோவிச். இப்போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜெக்கோவிச் முதல் செட்டை 6:4 என வெற்றி கொண்டார். பின்னர் இடம்பெற்ற 2ஆவது செட்டை 7:6 என போராடி வென்ற ஜெக்கோவிச் தீர்மானமிக்க 3ஆவது செட்டை 6:4 என கைப்பற்ற 3:0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நவோக் ஜெக்கோவிச் இறுதிக்குள் நுழைந்தார்.
அடுத்து இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் டேனியல் மெத்வடேவை எதிர்த்தாடினார் ஸ்பெய்னின் கார்லோஸ் அல்கராஸ். இப் போட்டியின் முதல் செட்டை 6:7 என இழந்தார் அல்கராஸ். இருப்பினும் 2ஆவது செட்டில் மீட்ச்சி கண்ட அல்கராஸ் 6:3 என வெற்றி கொண்டு சமப்படுத்தினார். பின்னர் இடம்பெற்ற 3ஆது மற்றும் 4ஆவது செட்டை 6:4, 6:4 என கைப்பற்றிய அல்கராஸ் 3:1 என வெற்றி கொண்டு விம்பில்டன் தொடரின் இறுதிப் போட்டிக்குள் கால்பதித்தார்.
அதற்கமைய நேற்று(14) இடம்பெறவுள்ள தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் முன்னாள் விம்பில்டன் சம்பியனான சேர்பியாவின் நவோக் ஜெக்கோவிச் மற்றும் இளம் வீரரான ஸ்பெய்னின் கார்லேஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தினர். நடப்புச் சம்பியனாக அல்காரஸ் ஆரம்பம் முதல் அதிரடியை வெளிப்படுத்த ஜெக்கோவிச் நிலைகுலைந்தார். இதனால் முதல் செட்டை 6:2 என கைப்பற்றினார் அல்கராஸ்.
பின்னர் இடம்பெற்ற 2ஆவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் ஆட்டத்தில் ஆக்ரோஷம் காட்டி 6:2 என மீண்டும் கைப்பற்றி முன்னிலையை உறுதி செய்தார். தொடர்ந்த தீர்மானமிக்க 3ஆவது செட்டில் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்புக்கு பஞ்சமின்றி நகர்ந்தது. இருவரும் சரிக்கு சமமாக விளையாடிய நிலையில், அல்கராஸ் 5:4 என்று முன்னிலை பெற்றார். அதன்பின் அடுத்தடுத்து ஜோகோவிச் புள்ளிகளைப் 5:5 என்று போட்டியை மாற்றினார். பின்னர் போட்டி 6:6 என்று மாறிஇ டை பிரேக்கருக்கு சென்றது.
டை-பிரேக்கரில் 7:4 என்ற கணக்கில் அல்கராஸ் வெற்றிபெற்றார். இதன் மூலமாக 6:2, 6:2 மற்றும் 7:6 என்ற நேர் செட் கணக்கில் அல்கராஸ் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 21 வயதாகும் அல்கராஸ் வெல்லும் 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் விம்பிள்டன் பட்டத்தை தொடர்ந்து 2வது முறையாக வென்ற 4வது வீரர் என்ற சாதனையையும் அல்கராஸ் படைத்துள்ளார்.
(அரபாத் பஹர்தீன்)