முன் பள்ளி சிறுவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு செயலமர்வு..!
முன்பள்ளி சிறுவர்களிடையே சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களுடன் வாய்ச்சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பொருட்டு கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு செயலமர்வொன்றினை அண்மையில் ஒழுங்கு செய்திருந்தது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஹபீப் முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை பற்சிகிச்சையாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது முன்பள்ளி சிறுவர்களின் வாய் சுகாதாரம் சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய வாய் சுகாதார பிரிவு குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)