உள்நாடு

இன்று முதல் இலங்கையர்களுக்கு தாய்லாந்திற்கு விசா இன்றி நுழைய அனுமதி..!

இலங்கை உட்பட 93 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தாய்லாந்தில் இன்று ஜூலை 15ஆம் திகதி முதல் வீசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் விசா பெறாமல் தாய்லாந்துக்கு செல்வது இதுவே முதல் முறை. தாய்லாந்து குடிமக்கள் விசா இல்லாமல் இலங்கைக்கு வருவதற்கு ஏற்கனவே இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.

தாய்லாந்தின் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, விசா அனுமதி பெற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 30 முதல் 60 நாட்கள் வரை நாட்டில் தங்கலாம்.

எவ்வாறாயினும், அனைத்து பயணிகளிடமும் பணம், தங்குமிடம் மற்றும் திரும்புவதற்கு/ டிக்கெட்டுகளுக்கான சான்றுகள் இருக்க வேண்டும்.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது குறுகிய கால வணிக நோக்கங்களுக்காகவோ வரவேற்கப்படுவார்கள் .

மேலும் தாய்லாந்தில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெறும் மாணவர்கள், பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருடம் தங்கி வேலை தேட, தாய்லாந்திற்குள் பயணம் செய்ய அல்லது ஆராய்ச்சி போன்ற பிற தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தாய்லாந்து அனுமதிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *