சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய நூலகத்திற்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு..!
சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட அல் ஹிலால் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளரும்,பொறியியலாளருமான எம்.சி.கமால் நிசாத் பாடசாலை நூலகத்திற்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான நூல்களை கையளித்தார்.
பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதான கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ் கலந்து கொண்டார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
