57 வயதிலும் சாதனை படைத்த உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் அவர்களுக்கு கெளரவம்..!
கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.நஜீம் தலைமையில் இடம்பெற்றது .
அந்த விழாவில் தியலுமயில் இடம்பெற்ற srilanka masters athletic 37th anual master open championship 2024 போட்டியில் 100 மீற்றர் சட்ட வேலிப் போட்டியில் (hurdies ) வெள்ளிப்பதக்கத்தையும், உயரம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று கல்முனை வலயத்திற்கு பெருமை சேர்த்த கல்முன அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய உடற்கல்வித்துறை ஆசிரியர் றிஸ்மி மஜீட் வலயக்கல்விப் பணிப்பாளர் சஹுதுல் நஜீம் பொன்னாடை போர்த்தி பதக்கங்களையும் வழங்கி கெளரவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதிக் கல்விப்பணிப்பாளர், கல்முனை வலய உடற்கல்லித்துறை ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.அன்ஸார் மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
(எம்.எம்.ஜெஸ்மின்)