போதைப்பாவனைக்கு அடிமையாகாமல் சமூகத்திற்கும் தனது பிரதேசத்திற்கும் சிறந்த இளைஞர்களாக திகழ்வதற்கு ஜிம் சென்றர்களும் விளையாட்டு கழகங்களும் உழைக்க வேண்டும்..! – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி
போதைப்பாவனைக்கு அடிமையாகாமல் சமூகத்திற்கும் தனது பிரதேசத்திற்கும் சிறந்த இளைஞர்களாக திகழ்வதற்கு ஜிம் சென்றர்களும் விளையாட்டு கழகங்களும் உழைக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
48 வது தேசிய விளையாட்டு விழாவில் (60 – 65) இடைப்ப்ரிவின் கீழ் பங்கு பற்றி முதலாம் இடத்தினை பெற்ற ஓரியன்ட் ஜிம் நிலைய பயிற்றுவிப்பாளர் எம்.எல்.எம்.சப்ராஸை கௌரவிக்கும் நிகழ்வு நிலைய வளாகத்தில் நேற்று இரவு இடம் பெற்ற போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உறையாற்றுகையில்.
இன்று அதிகமான இளைஞர்கள் போதைப்பாவனைக்கு அடிமையாகி சிறுவயதிலயே தங்களால் எந்த வேலைகளையும் செய்யமுடியாது உடல் சோர்ந்து காணப்படுவதையும் சில வேலை இளவயது மரணம் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது அவ்வாறானவர்களுக்கு சிறந்த வழிகாட்டல் இன்மையே காரணம்.
ஓரியன்ட் ஜிம் நிலையத்தினை போன்று எமது பிரதேசத்தில் இன்னும் பல ஜிம் நிலையங்கள் இயங்குகின்றது அது வரவேற்கத்தக்க விடயமாகும் எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் உள்ள ஜிம் நிலையங்கள் இன்னும் அதிகமான இளைஞர்களை உள்வாங்கி எமது பிரதேசத்தில் சிறந்த இளைஞர்களை உருவாக்குவதுடன் போதைப்பாவனை அற்ற பிரதேசமாகவும் மாற்றுவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.
எதிர்காலத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையங்களும் எமது பிரதேசத்தில் ஆரம்பிக்கும் கருத்திட்டம் உள்ளதாகவும் முன்னால் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
எம்.எல்.எம். சப்றாஸ் எமது மாவட்டத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் பெற்றுத்தந்த வெற்றிக்காக அவரையும் ஓரியன்ட் ஜிம் நிலைய நிருவாகத்தை பாராட்டும் வகையிலும்; அதன் வளர்ச்சிக்காகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிசாட் பதியுதீன் பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபா ஒதிக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசீக், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத், கிராம சேவை உத்தியோகத்தர் ரீ.எல்.எம்.அமானுல்லாஹ், செம்மண்ஓடை அல்ஹம்ரா வித்தியாலய பிரதி அதிபர் எச்.எம்.எம். ஹக்கீம் உட்பட ஓரியன்ட் ஜிம் நிலையத்தின் மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும்கலந்து கொண்டனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)