உள்நாடு

பதுளை அல் அதானில் இருசிறப்பு விழா!

பதுளை அல் – அதான் மகாவித்தியாலயத்தில் பெறுமதி மிக்க ”சுத்திகரிப்பு குடிநீர் தாங்கி” மற்றும் புதிய ”கலா மேடை” த் திறப்பு விழா சிறப்பு நிகழச்சிகள் அதிபர் எம்.எஸ்.எம் . ஸரூக் தலைமையில் நடைபெற்றன.

ஊவா மாகாண உதவிக் கல்விப்பணிப்பாளர் வெங்கடேஸ்வரன் பிரதம அதிதியாக பங்கேற்ற இவ்விழாவில் நெதர்லாந்து “stichting mission Lanka” அமைப்புடன் மெதகம ‘இளைஞர் நலன்புரிச் சங்கம் ஒன்றிணைந்து அன்பளித்த சுத்திகரிப்பு குடிநீர் இ தாங்கி, வர்த்தகப் பிரமுகர் எம்.எச்.எம்.நளர் ஹாஜி அமைத்த கலாமேடை (Play Stage) ஆகியன பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டன.

மாணவர் தம் கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேறின. S.L.M மின் பிரதிநிதி சங்க, முன்னாள் அதிபர் மர்ஹீம் எம். நாஸிமின் இளைய சகோதரருமான அலுப்பொத்த அல்ஹாஜ் நளர் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் விசேட அதிதிகளாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் சம்பத் பிரசன்ன, மெதகம வை.எம்.ஏ வின் தலைவர் எம்.பீ.எம். பியாஸ் பொருளாளர் பதுருஸ் ஸமான், மெதகம பெரியபள்ளிவாசல் தலைவர் சகிஇ பதுளை அன்வர் ஜீம்சதுப் பள்ளிவாசல் பிரதம இமாம் லுத்ஃபுல் அலீம் மௌலவி , அன்வர் தலைவர் இம்தியாஸ் பப்கீர்டீன் உள்ளிட்ட நிருவாகிகள், பஃ வைத்துஸ் ஸகாத் தலைவர் சிபான் யூசுப் மௌலவி, ப /அல் ஹிக்மா அதிபர் எம்.ரிஸ்வான் மற்றும் பிரதி அதிபர்கள்,ஆசிரியரகள், பிரமுகர்கள் கலந்து  கொண்டிருந்தனர்.

(அப்துல் வாஹிட் ஏ.குத்தூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *