உள்நாடு

சமூகசேவகி ஹனீயா கப்பார் அவுஸ்திரேலியாவில் காலமானார்

பதுளுப்பிட்டி, மற்றும் வெள்ளவத்தையில் வசித்தவரும் சமூக சேவகியும், கொடைவள்ளலுமான சித்தி ஹம்ஸதுல் ஹனீயா ஏ. ஜப்பார் கடந்த செவ்வாய்க்கிழமை (09) அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா மெல்பர்;ன் நகரில் ‘ராவதான் அர்ரஹ்மான்’ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மர்ஹுமா ஹனீயா டாக்டர் அல்-ஹாஜ் என்.எம்.ஏ. ஜப்பாரின் துணைவியும், அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களான டாக்டர் அல்தாப் கப்பார், தஸ்லீமா பர்வீன் ஆகியோரின் தயாரும் ஆவார்.
பதுளை மற்றும் ஏனைய பிரதேச பின் தங்கிய மக்களுக்கு பணத்தாலும் பொருளாலும் தமது கணவர் ஜப்பார் சகிதம் ஒன்றிணைந்து அள்ளிக் கொடுத்தவர்.

மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவர்களுக்கு தொடராக (5 வருடங்கள்) புலமைப்பரிசில் வழங்கியமை, பட்டதாரி மாணவர்களுக்கும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கியமை, பொருளாதார குடும்பங்களுக்கு வீடு, கட்டுமானம் மற்றும் தண்ணீர், மின்சார உதவி வழங்கியமை, விதவைகள் நோயாளிகளுக்கு சத்திர சகிச்சை உட்பட மருத்துவ ரீதியில் உதவியமை, ரமழான் மாதங்களில் பணத்தாலும், பொருளாலும் வழங்கியமை.

சிலோன் பைத்துல் மால் அமைப்பு, மற்றும் பதுளை பைத்துஸ் ஸகாத், பதுளை வை.எம்.எம்.ஏ. போன்ற சமூக நன்புரி அமைப்புகளுடன் ஒன்றிணைந்து உறுதுணையாக இருந்தமை கொரோனா காலத்திலும் உதவியமை என்று பற்பல நல்ல சேவைகளை செய்தவர்.

மர்ஹுமா ஹனீயா பதுளை அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகசபை உறுப்பினரும், வர்த்தகப் பிரமுகருமான அல் – ஹாஜ் என்.எம்.எம். ரபீக் (ஸ்) கின் மைத்துனியுமாவார்.
அன்னாருக்காக மறைவான ஜனாஸா தொழுகையும் கடந்த வெள்ளிக்கிழமை 12 அன்று நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பதுளை அன்வர் இமாம் அல்-ஹாபிஸ் தஸ்னீம் தாஹிர் (ரஹ்மானி) தொழுகையை நடத்தியதுடன் துஆப் பிரார்த்தனையும் புரிந்தார்.

(வாஹிட் குத்தூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *