உள்நாடு

கல்முனை சாஹிராவில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூட அடிக்கல் நட்டி வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைப்பு..!

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முக்கிய தேவைப்பாடாக இருந்த மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நட்டி, வேலைத்திட்டமும் பாடசாலையில் நேற்று (11) வியாழக்கிழமையே ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பவள விழாவை சிறப்பிக்கும் முகமாக திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அயராத முயற்சியினால், இந்நிர்மாணப் பணிக்காக 115 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதற் கட்டமாக 60 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டம் நேற்று அடிக்கல் நட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல் நட்டிவைத்தார்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம கலந்து கொண்டதோடு, விசேட அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக், அம்பாறை மாவட்ட பொறியியலாளர் எம்.ஏ.எம்.சாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர், முன்னாள் அதிபர்கள் மற்றும் இதர பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலையின் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *