உள்நாடு

சிலாவத்துறை வைத்தியசாலையில் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின்கீழ் இடம்பெறும் SMART வகுப்பறைகளை நன்கொடை செய்யும் நிகழ்வுகளுக்காக மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டபோது சிலாவத்துறை அரச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

அதன்போது, குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் மற்றும் அங்கு இருக்கும் குறைகளை அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதிமாருடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கட்சின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *