கிடைக்கும் முதல் நாளிலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சியின் 30 பேரின் கையொப்பத்துடனான கடிதமொன்றினை ஐக்கிய மக்கள் சக்தியில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மததும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று கையளித்துள்ளார்.

அரசியலமைப்பை மீறி தேர்தலை நிறுத்த முனையும் சதிகளை முறியடித்து கிடைக்கும் முதல் நாளிலே ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும் பாதுகாப்பான மற்றும் நீதியான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு பூரண அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் என குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைகுழுவுக்கு விசேட கடிதமொன்றை கையளித்துள்ளன.

எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரின் யையொப்பத்துடனான கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (12) கையளித்தார்.