காத்தான்குடியில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உதயம்..!
சமுதாய சிந்தனையை இலக்காகக் கொண்டு புதிய அத்தியாயமாக காத்தான்குடியில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் ஒன்று08/07/2024 முதல் தோற்றுவிக்கப்பட்டது.
காத்தான்குடி நகரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் எதிர் நோக்கும் சவால்களை சீர் செய்வது சமூகப்பணிகளில் ஈடுபடுவது கூட்டுறவை மேம்படுத்துவது ஊழியர்களின் நலன்கள் பேணுவது போன்ற நல்ல விவகாரங்களை நோக்காகக் கொண்டு அமையப் பெற்றிருக்கிறதாக அறியக்கிடைத்தது.
‘KATTANKUDY JEWELLERY ASSOCIATION’ காத்தான்குடி நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் எனும் பெயரில் இயங்கவுள்ள இவ்வமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்களாக பின் வருவோர் நியமனம் பெற்றுள்ளனர்.
தலைவர் எஸ்.எம் சாதுலி,
உபதலைவர் ஏ.எம்.யு. அஸீம்.
செயலாளர் ஏ.எம். ஸாதிகீன், உப செயலாளர் ஏ.எல்.எம். காலிதீன்,
பொருளாளர் எம்.ஐ.எம். பாஹிம், உப பொருளாளர் எம்.என்.எம். நிஹாஜ்.
15 பேர் செயற்குழு உறுப்பினர்கள்.
அன்று நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் 43 நகைக்கடை உரிமையாளர்கள் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இந்நிகழ்வில் பல தெளிவுகளை வழங்குவதற்காக, அகில இலங்கை நகை உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் திரு சரவணன் அவர்களும் இந்திய தென் மன்டல இயக்குனர் Gems and jw exports promotion council அமைப்பாளர் திரு சூர்ய நாராயணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பான பல கருத்துக்களை முன் வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இரு சமூக நகைக்கடை உரிமையுளர்களும் கலந்து கொண்டனர்.