Uncategorized

2024 global இளைஞர் மாநாட்டில் பங்கேற்க பேருவளை மாணவர்கள் சீனா விஜயம்

சீனாவில் நடைபெறும் 2024 global இளைஞர் மாநாட்டில் பங்கு பெற்றதற்காக பேருவளையிலிருந்து பல பாடசாலைகளையும் சேர்ந்த ஐந்து பழைய மாணவர்கள் 10 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவுக்கு செல்கின்றனர்.

இலங்கை-சீனா சமூக கலாச்சார நட்புறவு சங்கத்தின் (ASLCSCC) முயற்சியால் இலங்கையில் இருந்து சுமார் 30 இளைஞர்கள் இந்த மாநாட்டில் பங்கு பற்றுகின்றனர். சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் அல்-ஹாஜ் இபாம் ஹனபியின் வேண்டுகோளின் பேரில் பேருவளை பகுதியைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு சர்வதேச பாடசாலை மாணவன் அய்மன் சப்ராஸ், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் பேருவளை கோல்டன்கேட் சர்வதேச பாடசாலை பழைய மாணவனான எம்.ஏ.எம்.பிலால்,கொழும்பு வாணிப முகாமைத்துவ பாடசாலை மாணவன் இஸ்மாயில் ஹாஷிம் ரிபான் ஆகியோர் (shandong) மாகாணத்திற்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலை பழைய மாணவன் முஹம்மத் சம்ஸ் காஸிம் முஹம்மத் ருசைத்,பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலை மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் முஹம்மத் பர்ஸான் முஹம்மத் அஷ்மல் ஆகியோர் நின்ஸியா மாகாணத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

இவர்களுள் அய்மன் சப்ராஸ்,எம்.ஏ.எம்.பிலால்,இஸ்மாயில் ஹாஷிம் சீனா நோக்கி பயணமாகினர்.

இலங்கையில் இருந்து செல்லும் 30 இளைஞர்கள் மேற்படி இளைஞர் மாநாட்டில் பங்குபற்றுவதோடு அங்குள்ள பாடசாலைகள்,பல்கலைக் கழகங்கள்,இளைஞர் மத்திய நிலையங்கள்,தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படும் இடங்களுக்கும் செல்லவுள்ளனர்.

இலங்கை-சீனா சமூக கலாச்சார நட்புறவு சங்க (ASLCSCC) தலைவர் இந்திரானந்த அபேசேகர தலைமையிலான சங்க உறுப்பினர்கள் இலங்கை-சீனா நாடுகளுக்கிடையிலான கல்வி,சமூக,வர்த்தக,கைத்தொழில்,கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத் துறைகளை மேம்படுத்த பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதன் ஓர் அங்கமாகவே 30 இளைஞர்கள் இளைஞர் மாநாட்டில் பங்குபெற்றனர்.

சீனா நின்ஸியா மாகாணத்துடன் பேருவளை தொகுதியை இணைத்து எதிர்காலத்தில் பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடன் ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

சீனாவுக்கு விஜயம் செய்த மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இஸ்திகார் ஜெமீல் நின்ஸியா மேயர் (Bai yuzhem) உடன் ஒப்பந்தத்திற்கான ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2024 global இளைஞர் மாநாட்டில் பங்கு பற்ற பேருவளை பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்த சீனா-இலங்கை கலாசார,சமூக நட்புறவு சங்க தலைவர் இந்திரானந்த அபேசேகர தலைமையிலான சங்க உறுப்பினர்களுக்கு பேருவளை வாழ் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.


(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *