வொய்ஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் ஏற்பாட்டில் அறிவுக்களஞ்சியம் நிகழ்வு
மாணவர்களின் அறிவுத்திறனை விருத்தி செய்யும் நோக்குடன் ஏறாவூர் கல்வி கோட்டத்தில் காணப்படுகின்ற பாடசாலைக்கு இடையிலான தொடரான அறிவுக்களஞ்சியம் போட்டி நிகழ்வு வொய்ஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது கட்டமாக 11/07/2024 வியாழக்கிழமை இன்று ஏறாவூர் மட் / அல் அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்றைய அறிவுக்களஞ்சிய போட்டியில் ஏறாவூர் முனீரா பாலிகா மகாவித்தியாலயம் மற்றும் ஏறாவூர் மட் அல் -அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் பங்குபற்றி இருந்தனர்.
இரண்டு சுற்றுக்களாக இடம்பெற்ற அறிவுக்களஞ்சியப் போட்டியில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் மேலதிக 60 புள்ளிகளால் ஏறாவூர் மட் / அல் அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலை இடம்பெற்ற அறிவுக்களஞ்சிய போட்டியினுடைய வெற்றியினை தனதாக்கி கொண்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நஸீஹா கன்ஷ்ரெக்சன் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.எம்.நழீம் கலந்து சிறப்பித்ததுடன் மட் /
அல் -அஸ்ஹர் பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.நவாஸ் ,பிரதி அதிபர் எம்.வை.எம்.நஸீர் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் எம்.எஸ்.அபுல்ஹஸன் வொய்ஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் தலைவர் ஏ.எச்.எம்.றாபி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் .
போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் போன்றனவும் நிகழ்வின் முடிவில் வழங்கி வைக்கப்பட்டன.
(உமர் அறபாத் -ஏறாவூர்)