சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு (Kidney Transplantation) உதவி கோரும் விண்ணப்பம்..!
நூர்முகம்மது அன்வர், NIC No.: 861312950V
பழைய காவல் அரண் வீதி, மாஞ்சோலை, மீராவோடை, ஓட்டமாவடி.
மேற்படி விலாசத்தில் வாழ்ந்து வரும் நான் தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தரும் விடயம் யாதெனில், கடந்த 02 வருட காலமாக எனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு கண்டியிலுள்ள CCCH வைத்தியசாலையில் 06 மாதங்களாகவும், அதன் பின்னர் பொலன்னறுவை சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனையில் வைத்திய நிபுணர். மைத்திரி பெர்ணான்டோ (0272030300) அவர்களிடம் ஒன்றரை வருட காலமாகவும் சிகிச்சை பெற்றுவருகின்றேன்.
சிறுநீரகங்கள் இரண்டும் முற்றாக பாதிக்கப்பட்டு இதன் தாக்கத்தின் உச்சத்தை அனுபவித்து வரும் நான், தற்போது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையினை (Kidney Transplantation) உடனடியாக செய்ய வேண்டிய நிலையிலுள்ளேன். 38 வயதையுடைய எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சொந்த வீடின்றி எனது குடும்பத்தாருடன் எனது சகோதரரனின் வீட்டில் வாழ்ந்து வருகின்றேன்.
எனக்கோ அல்லது எனது மனைவிக்கோ பண உதவி செய்யும் வசதியுடன் கூடிய உறவினர்கள் எவரும் இல்லை. இன்ஷாஅல்லாஹ் நான் இன்னும் உயிர் வாழ வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.
கொழும்பு வெஸ்ட்ரன் வைத்தியசாலையில் எனக்குரிய சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ரூபா. 4,600,000.00 (நாற்பத்தியாறு இலட்சம்) மதிப்பீட்டறிக்கை தரப்பட்டுள்ளது. சிறுநீரகம் நானே ஒழுங்கு செய்ய வேண்டும். மேற்படி இரண்டு விடயத்திற்கும் மொத்தமாக ரூபா. 7,500,000.00 (எழுபத்தைந்து இலட்சம்) தேவையாகவுள்ளது. உதவியற்ற எனது குடும்ப நிலையினைக் கவனத்திற் கொண்டு பெருமனதுடன் சிறுநீரகம் தானம் செய்ய விரும்புபவர்கள் (எனது இரத்த மாதிரி B+ve ஆகும்) எனக்கு சிறுநீரகம் ஒன்றினை வழங்குமாறும், உங்களால் முடிந்த பண உதவிகளை வழங்கி எனது சத்திர சிகிச்சைக்கு உதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இத்துடன், எனது வைத்திய அறிக்கைகளின் பிரதிகளும் இணைத்துள்ளேன்.
நன்றி,
இவ்வண்ணம் உண்மையுள்ள,
நூர்முகம்மது அன்வர்
தொடர்பு இல: 0777561897
பண உதவி செய்ய விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடவும்.
1. Miss. N. Anaja
2. Mr. M.S. Muzammil
A/C No.: 340-2-003-7-0032211
Peoples Bank
Oddamavadi