அனுராதபுர ரம்பாவ பகுதியில் யுக்திய சுற்றி வளைப்பு
நாடளாவிய ரீதியில் மீண்டும் புதிய திட்டத்துடன் “யுக்திய ” விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான ” யுக்திய ” என்னும் பொலிசாரின் சுற்றிவளைப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிலின ஹேவா பத்திரனவின் வழிகாட்டலுக்கிணங்க ” யுக்திய” விசேட சுற்றிவளைப்பு அனுராதபுரம் ஏ9 ரம்பாவ வீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை போக்குவரத்து பொலிசார் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்ததுடன் பஸ் , மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட பல வாகனங்களும் பயணிகளின் பயணப்பொதிகளும் சோதனைக்கு ட்படுத்தப்பட்டன. போதைப்பொருள் தொடர்பிலான விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் மோப்ப நாயானா (Police dog diuk) சுற்றிவளைப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இதன்போது அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பான போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி முஹமட் நியாஸ் மிஹிந்தலை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
(எம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம்)