உள்நாடு

சாய்ந்தமருதில் நீர் இணைப்புக்காக சேதமாக்கப்பட்ட  வீதிகளை சீரமைக்குமாறு   இலங்கை நீதிக்கான மைய்யம் கோரிக்கை..!

கல்முனை மாநகர சபை பிரதேசத்தினுள் புதிய நீர் இணைப்புக்காக மாநகரசபையின் அனுமதி பெற்று சேதமாக்கப்பட்ட கொங்கிரீட் வீதிகள் இன்னும் சீர் செய்யப்படாததால் மக்கள் பல்வேறு அசௌகரிகங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் என்று இலங்கை நீதிக்கான  மய்யம் குற்றம்சாட்டி உள்ளது.
இலங்கை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஸஹ்பி எச்.இஸ்மாயில் இது விடயமாக  குறிப்பிடும் போது;
இவ்வாறான புதிய நீர் மின் இணைப்பினை பெறும் விண்ணப்பதாரர்கள் கல்முனை மாநகர சபைக்கு ஏற்கனவே புதிய நீர் இணைப்புக்காக சேதம் செய்யப்படும் பாதையினை செப்பம் செய்வதற்கான கட்டணத்தை செலுத்திய பின்னரே நீர் இணைப்புக்காக அனுமதியை பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால், கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குள்  நீர் இணைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சேதம் செய்யப்பட்ட பாதைகள் மாநகர சபையினால் சீர் செய்யப்படாமல் நெடுங்காலமாக  காணப்படுகின்றது.
இது மாநகர சபை கட்டளை சட்டத்தினை மீறும் ஒரு செயற்பாடாகும். மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படி, வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகரசபையின் அடிப்படைப் பொறுப்புகளாகும்.
இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத்  தவறுவது, மாநகர சபையின் பிரயோசன தன்மையை கடுமையான கேள்விக்கு உட்படுத்துகிறது.
ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்கவென நிதி அறவிடப்பட்டு பின்னர் சேவையை வழங்காதிருப்பது ஒரு நிதி மோசடி ஆகும் என நீதிக்கான மய்யம் சுட்டிக்
காட்டி உள்ளது.
நீதிக்கான் மைய்யம் கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் செப்பெனிடும் பணியை உடன் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு  மாநகர சபை நடவடிக்கை எடுக்காது போனால் மாநகர சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கையை  முன்னெடுக்க வேண்டி வரும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *