கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸடீன் பாராட்டிக் கௌரவிப்பு..!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 – 29 வரை ஒரு வார காலம் கைகழுவுதல் விழிப்புணர்வு வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதுரியா பானு ஆகியோர் இணைந்து பணிப்பாளரை பாராட்டி கௌரவித்தனர்.
இந்நிகழ்வின்போது பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)