உள்நாடு

48வது தேசிய விளையாட்டு விழாவில் ஓரியன்ட் ஜிம் சென்டர் சாதனை

கொழும்பு டோல்லிட்டான் உள்ளரங்கில் நடைபெற்ற 48 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் (60-65) இடைப்பிரிவின் கீழ் பங்குபற்றிய மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இயங்கும் ஓரியன்ட் ஜிம் நிலையத்தின் பயிற்றுவிப்பாளர் எம்.எல்.எம்.சப்ராஸ் முதலாம் இடத்தினை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தனது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான 48வது விளையாட்டு விழாவில் ஆண் கட்டழகன் போட்டியில் (60-65) இடைபிரிவில் பயிற்றுவிப்பாளர் எம்.எல்.எம்.சப்ராஸ் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது அயராத முயற்சியும் அதற்கான பின்னூட்டலுமே இதற்கான காரணம் என்று ஒரியன் ஜிம் நிலையத்ன் பணிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.எம். நவாஸ் தெரிவித்தார்.

எமது பயிற்சி நிலையத்தின் முதன்மை விருந்தினர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர், பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வேலுப்பிள்ளை ஈஸ்வரன், விளையாட்டு உத்தியோகத்தர் இன்சாட் அலி, சிரேஸ்ட்ட சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசிக், எம்.எம்.எம். முஹம்மது அஸ்மீர், இந்த வெற்றி கிடைப்பதற்கு உறுதுணையாக நின்ற நண்பர்கள், பயிற்சி நிலையத்தில் இணைந்து செயல்படுகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள அனைத்து நல் உள்ளங்களும் இச்சந்தர்ப்பத்தில் ஓரியன் ஜிம் நிலையத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக மௌலவி ஏ.ஆர்.எம்.நவாஸ் தெரிவித்தார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *