35 வருட சேவையிலிருந்து அநு/ நேகம முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எச். ராஜி ஐனுல் ஹக் ஓய்வு
வட மத்திய மாகாண அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அநு/நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எச். ராஜி ஐனுல் ஹக், தனது 60 ஆவது வயதில் (2024.07.05 அன்று) அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதே பாடசாலையில் 1989.09.01 ஆம் திகதியன்று முதலாவது ஆசிரியர் நியமனத்தைப் பெற்றதோடு, மேலும் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, 2015.05.01 ஆம் திகதியிலிருந்து 2024.07.08 ஆம் திகதி வரை, அநு/ நேகம முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி பல சேவைகளைச் செய்தார்.
இவர் 35 ஆண்டுகளைக் கல்விக்காக அர்ப்பணித்து, பலர் உள்ளங்களில் இடம் பிடித்தார். அகில இலங்கை சமாதான நீதவானாகவும், கல்நேவ பொலிஸ் ஆலோசனை சபை உறுப்பினராகவும், கல்நேவ மத்தியஸ்த சபை உறுப்பினராகவும், சமூக சேவை டிப்ளோமாதாரியாகவும் விளங்கிய இவர், பல்வகை ஆளுமை கொண்டவராவார்.
நேகமையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ராஜி ஐனுல் ஹக், நேகமையிற்கு பெருமை தேடித்தந்து மற்றும் கல்விப் பணிப்பாளராகத் திகழ்ந்து பல சேவைகளைப் புரிந்த மர்ஹூம் பீ. ஹபீப் – மர்ஹூமா ஜே.எல். ராஹிலா உம்மா தம்பதிகளின் புதல்வருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )