மாத்தளை மாவட்டத்தில் பரவும் எலிகாய்ச்சல் தொற்று..!
மாத்தளை மாவட்டத்தில் எலிகாய்ச்சல் தொற்றியவர்கள் கடந்த இதுவரை 25 பேர் இனம்காணப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருப்பதுடன் அவர்கள் வைத்திய சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
எலிகளின் சிறுநீரிலுள்ள ஒருவகை வைரஸ் கிருமிகள் மூலமாகப் பரவும் இக்காய்ச்சல் ஏனைய கால்நடைகளின் சிறுநீரிலும் மலத்திலும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
நீர் தேங்கும் இடங்களான வயல் வெளிகள் மாணிக்கக் கல் அகழ்விடங்கள் கால்வாய்கள் வடிகாண்கள் ஆகிய இடங்களில் பணிகளாற்றுவோருக்கும் இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் குறிப்பாக இவற்றில் பணியாற்றுவோர் கால்களில் காயங்களுள்ளோர் இந்நோய்த் தொற்றுக்கு உடன் ஆளாகும் நிலைமையுண்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது
எனவே இதனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குக் குறிப்பாக வயல்களில் பணிகளாற்றுவோருக்கான எலி காய்ச்சல் பற்றியும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவது பற்றியும் அதற்கான தடுப்புச் சிகிச்சைகள் பற்றிய அறிவூட்டல் நிகழ்ச்சியை
அவ்வப்போது சுகாதார அதிகாரிகள் நடாத்திவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
எனவே மக்கள் எலிக் காய்ச்சல் பற்றி அவதானமாகவிருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவும் நிலையும் ஏற்பட்டிருப்பதாகவும் அறிவித்தல்கள் கிடைத்துவருவதையொட்டி கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில் கோழி இறைச்சி விற்பனையில் சற்று வீழ்ச்சியேற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
(உக்குவளை ஜலீல்)