உள்நாடு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், செந்தில் தொண்டமான் சந்திப்பு; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தவும் பேச்சு.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை (08.07.2024) கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகப்பூர்வ பயணமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் சென்றார்.

பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்பில் மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை நடத்தினார்.

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கான சாதகமான காரணிகள் குறித்தும் மலேசிய பிரதமருடன், செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.

அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பையும் பிரதமர் இப்ராஹிம்க்கு விடுத்ததுடன், இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட நினைவு முத்திரையையும் மலேசியப் பிரதமருக்கு வழங்கியிருந்தார்.

இதேவேளை, மலேசிய நிதியமைச்சர் அமீர் ஹம்சா, பிரதமர் துறை அமைச்சர் (இஸ்லாமிய சமய விவகாரங்கள்) நைம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான பொருளாதார உறவுகள் குறித்து கலந்துரையாடல்களையும் நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *