குவைத் நிதியுதவியுடன் பொல்கஹவெல அல் இர்பானுக்கு இரண்டு மாடி கட்டிடம்
குவைத் அரசின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பொல்காவெல அல் இர்பான் மத்திய கல்லுாாிக்கு 2 மாடிகளைக் கொண்ட 8 வகுப்பறைகளுக்கான அடிக்கல் நடும் வைபவம் ஞயிற்றுக்கிழமை 07.07.2024 கல்லுாரி அதிபர் அஸ்மி ஹவ்பர்சா தலைமையில் நடைபெற்றது.
இக் கட்டிடத்திற்காக அடிக்கற்களை இசாக் ரகுமான் பா.உ, குவைத் தூதுவராலயத்தின் அதிகாரி அஷ்ஷேக் எம். பிர்தௌஸ் (நளிமி) அல்ஹிமா இஸ்லாமிக் சேவிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஆஷேக் நூருல்லாஹ் (நளிமி) அல்ஹிமா நிறுவனத்தின் உப தலைவர் அமினுடீன், குருநாகல் மகப்பேற்று வைத்திய நிபுனர் வைத்தியர் சாபி சிஹாப்தீன் , பொல்காவலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய குவைத் தூதுவரின் அதிகாரி எம்.பிர்தௌஸ் – குவைத் நாட்டின் உதவித் திட்டங்கள் கடந்த ஜந்து தசாப்தங்களாக இலங்கைக்கு தொடர்ந்து உதவி வருகின்றன. கடந்த இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இக் கல்லுாரிக்கு எவ்வித பௌதீக வளங்களும் கிடைக்கவில்லை. இந்த ஊரை நான் பிறப்பிடமாகக் கொண்டமையால் இக் கல்லுாாிக்கென பாடசாலை கட்டிடமொன்றை வேண்டி எனது குவைத் துாதுவர் கால்ப் எம். எம். பு தாஹிரிடம் கோரிக்கை முன் வைத்த போது ஒரு தளமாடி மட்டுமே அனுமதி கிடைத்து.
ஆனால் எனது துாதுவர் நான் பிறந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையெனக் கூறியதும் உடன் இந்தப் பாடசாலைக்கு 2 மாடிகள் கொண்ட 8 வகுப்பறைகளை பெற்றுக் கொடுத்தார் அதற்காக குவைத் துாதுவருக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். அதே போன்று குவைத் எமது ஊர் பாடசாலைக்கு மட்டுமல்ல இதே போன்று 40 பாடசாலைகளுக்கு இத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்ற அஷ்ஷேக் நுாறுல்லாஹ் அவர்கள் ஊடாக இத் திட்டத்தினை பூரணப்படுத்தி பாடசாலை அதிபரிடம் கையளித்துள்ளோம்.
எமது நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் பாடசாலைகளுக்கு பௌதீக வளங்கள் கிடைக்க நிதி நிலமை இல்லாத இச் சர்ந்தர்ப்பத்தில் இலங்கை மாணவர்களது கல்விக்காக குவைத் அரசாங்கமும் குவைத் உதவிசெய்யும் நிறுவனங்கள் இணைந்து எமக்கு இவ்வகையான உதவிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அதற்காக நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இப் பாடசாலையில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர் போதிய பௌதீக வளக்குறைபாடுகள் உள்ள பாடசாலைகளே இயங்கி வருகின்றன.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பிணர் இசாக் ரஹ்மான் அனுராதபுர மாவட்டமாக இருந்தாலும் பொல்காவலை இப் பாடசாலைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பாடசாலை முன்வாயில் மதில் அமைப்பதற்காக 2.5 மில்லியன் ருபாவை ஒதுக்கி உள்ளதாகவும் இசாக் ரஹ்மான் அங்கு தெரிவித்தார். அத்துடன் டாக்டர் சாபி சஹாப்தீன் அங்கு இவ் திட்டத்தை பாராட்டியும் அவருக்கு நடந்த அநீதிகள் பற்றியும் அங்கு உரையாற்றினார்.
(அஷ்ரப் ஏ சமத்)