அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய நிதர்சனதத்தின் நிழல் கவிதை நூல் வெளியீடு
இலைமறைகாயாய் ஒளிந்திருப்பவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களது எழுத்தாக்கத்திற்கு உயிரூட்டும் வகையில் செயற்பட்டுவரும் ஏட்டுலா கனவாக்கத்தால் வெளியிடப்பட்ட அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய அவரது கன்னிப்படைப்பான “நிதர்சனத்தின் நிழல்” கவிதை நூல் வெளியீட்டு விழா (06/07/2024), அக்கரைப்பற்று கலை இலக்கிய பேரவையின் தலைவர் கலாபூசனம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் கவிஞரும், இலக்கிய செயற்பாட்டாளருமான எம்ஐஎம். நாளீரின் தொகுப்பில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் கலந்து சிறப்பிதத்துடன், ஓய்வுநிலை நில அளவையாளர் ஏ.எல்.முஹிதீன் பாவா, அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி என்.நவப்பிரியா ஆகியோரும், மேலும் விஷேட அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சன்றைஸ் ஜெய்னுடீன், மு.ச கலாசார திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.இம்றாலெப்பை ,ஏட்டுலா கனவாக்க குழு சார்பாக அதன் பணிப்பாளர் ஆஷிக் ஹுசைன், ஆர் ஜே மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் சமூகப்பணி இளம் கலைமாணி மாணவரும் வானொலி அறிவிப்பாளருமான ஏ எம். இன்ஷாப், மூதூர் ஜே.எம்.ஐ நிறுவன பணிப்பாளர் முஹம்மட் இஹ்ஷான் ,இளம் எழுத்தாளரும் பல்கலைக்கழக மாணவியுமான ஹஸ்மியா தாஹா மற்றும் பல இலக்கிய கர்த்தாக்களும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில், முதல் நூற்பிரதியை றஸ்பாஸ் பணிப்பாளர் ஏ.கே.றிப்னாஸும், இரண்டாம் பிரதியை நூலாசிரியரின் தாயார் எம்.எம்.சித்தி றிபாயாவும் பெற்றுக் கொண்டனர் மேலும் வருகைதந்தோருக்கு புத்தகப் பிரதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் ஊடக பங்காளராக ஆர்.ஜே மீடியா இணைந்து கொண்டன.
ஹெம்மாதகை பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட ஏட்டுலா கனவாக்கத்தின் பணிப்பாளர் ஆசிக் ஹுசைன் இன் முயற்சியாள் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாத்தில் அதன் முதற்கனவை நனவாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஏட்டுலா கனவாக்கம் குழும உறுப்பினர்கள்
ஆஷிக் ஹுசைன் (பணிப்பாளர்-ஏட்டுலா கனவாக்கம்),திரு. அமின் முஹம்மட் (பிரதம ஆசிரியர்-தமிழ் நெஞ்சம்-பிரான்ஸ்),திரு.ஜே.எம்.ஐ இஹ்சான் (பிரதம ஆசிரியர் முத்திதழ் சஞ்சிகை),திரு. முஹம்மட் இன்ஷாப் (பணிப்பாளர் Rj Media),திரு.றஜா முஹம்மட் (பிரதம ஆசிரியர் பேனாத்துளிகள் சஞ்சிகை),திருமதி. ஆயிஷா ஷகீலா ( வடிமைப்பாளர்-Designglitz),செல்வி.பஹ்ரியா பாய்ஸ் (இளம் எழுத்தாளர் – ஹெம்மாதகமை பிராந்தியம்.,செல்வி.அதீகா மசூர் – Skyதமிழ் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.,செல்வி.ஹாஸ்மியா தாஹா ( இளம் எழுத்தாளர் பல்கலைக்கழக மாணவி(SEUSL).