சதொசவில் சில பொருட்களின் விலை குறைப்பு..!
பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் லங்கா சதொச நிறுவனம் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
இதன்படி, உருளைக்கிழங்கு கிலோ கிராம் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 215 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், சிவப்பு பருப்பு கிலோ கிராம் ஒன்றின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 282 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளை சீனி கிலோ கிராம் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு 269 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனையகங்களிலும் நேற்று (04) முதல் குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.