இம்தியாஸ் எம்.பீ யின் சகோதரர் காலமானார்..!
முன்னாள் சபாநாயகர்; அமைச்சர்; தென்மாகாண ஆளுனர் அல்ஹாஜ் பாக்கீர் மார்க்கார் அவர்களின் புதல்வரும், முன்னாள் அமைச்சரும்; பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் அவர்களின் சகோதரருமான யாசிர் பாக்கிர் மார்க்கார் அவர்கள் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
அவரின் ஜனாஸா, நேற்று பேருவளை, மருதானை அரப் வீதி இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, அஸர் தொழுகையை அடுத்து, பேருவளை, மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் இன்னும் பெரும் திரளான மக்கள் நல்லடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(பேருவளை பீ.எம். முக்தார்)