உள்நாடு

பாடசாலை பல் மருத்துவ பிரிவு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு  இட மாற்றம் ..!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பல் மருத்துவ பிரிவுகள் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியிலும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்திலும் இயங்கி வந்ததன.
சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய  அதிபர் யூ. எல். நசார் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க குறிப்பிட்ட  பல் சிகிச்சை பிரிவானது முன்னாள் அதிபர் நஸ்லின் ரிப்கா அன்சாரின் ஒத்துழைப்போடு மல்ஹருஸ் ஸம்ஸ்  மகா வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டது.
தற்போது சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ்  மகா வித்தியால அதிபர் எம்.எஸ்.எம். நபார் அவர்களின் எழுத்து மூல வேண்டுகோளுக்கிணங்க
இடப் பற்றாக்குறை காரணமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  காரியலயத்துக்கு மாணவர்களுக்கான பல் மருத்துவ பிரிவு(1) மாற்றப்பட்டுள்ளது
வழமை போல் சுகாதார வைத்திய அதிகாரி  காரியலயத்தில் மாணவர்களுக்கான பல் மருத்துவ சிகிச்சை இடம்பெறும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஸத் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *