உள்நாடு

மாணவர்களுக்கு  மதவொழுக்கப் பண்பாடுகளைப் பயிற்றுவிப்பதில் அஹதிய்யா  பாடசாலைகளின்  அவசியம்  உணரப்பட வேண்டும்..! -உக்குவளை அஹதிய்யா பாடசாலை பொறுப்பாசிரியை பர்ஹானா

இன்றைய நிலைமையில் மாணவர்களுக்கு  மதவொழுக்கப் பண்பாடுகளைப் பயிற்றுவிப்பதில் அஹதிய்யா  பாடசாலைகளின்  அவசியம்  உணரப்படவேண்டுமென உக்குவளை அஹதிய்யா பாடசாலை பொறுப்பாசிரியை பர்ஹானா தெரிவித்தார்

உக்குவளையில் அஹதிய்யா பாடசாலைகள் தொடர்பாக  பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு  அறிவூட்டும் வகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்…
அரச அங்கீகாரத்துடன் இயங்கும் இப்பாடசாலைகள்  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 8. மணிமுதல் 11.30 மணிவரை நடாத்தப்படும் இப்பாடசாலைகளில் மதவொழுக்கப் பண்பாடுகளை உள்ளடக்கியவகையில் முக்கிய ஐந்து பாடங்கள் சிறப்பாகப்  போதிக்கப்பட்டு
கின்றன இதன் ஆசிரியர்களான நாம் ஊதியமின்றி சேவை அடிப்படையிலேயே தொண்டர்களாக கல்வி போதித்துவருகிறோம் எமது அஹதிய்யா பாடசாலை அதிபராக ஹாஜி எஸ்.ஹலீம்தீன் அவர்களது வழிகாட்டல்கள் எமக்கு பேருதவியாகவுள்ளன  அஹதிய்யா பாடத்திட்டத்தில்  அஹதிய்யா சான்று  , இடைநிலை ,  மற்றும் தர்மாச்சாரிய பரீட்சைகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருவதுடன் இதன் தர்மாச்சாரிய பரீட்சையின்பின் கிடைக்கும் பெறுபேறு சான்று  பல்கலைகழக அனுமதி மற்றும் தொழில்வாய்ப்புக்களின்போது மேலதிக தகைமையாகக் கொள்ளப்படுகிறது அவ்வாறு பெற்றுக்கொண்ட அஹதிய்யா மாணவர்கள் சிலர் குறிப்பிட்ட நிறுவனங்களில் நல்ல நிலையில் பண்புடன் பணிசெய்துவருவது குறித்து பெருமிதமடைகிறேன்
எனவே இன்றைய நிலைமையில் மாணவர்களுக்கு மதவொழுக்கப் பண்பாடுகளைப் பயிற்றுவித்து அவர்களை நற்பிரஜைகளாக வாழ வைக்கப்
 பயிற்றுவிப்பதில் அஹதிய்யா பாடசாலைகளின் அவசியம் உணரப்படவேண்டும்  அத்துடன் இந்துக்களுக்கு  அறநெறி  என்றும்  கிறிஸ்தவர்களுக்கு மறைக் கல்வி பாடசாலைகள் இயங்கிவருவதுடன் அவற்றிலும் மாணவர்கள் பயன்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழைகளில் தனியார் நடாத்தும் வகுப்புகளால் அஹதிய்யா பாடசாலைகளுக்கு மாணவர்கள் வரவு மந்தநிலையிலுள்ளது எனவே பெற்றோர் தமது மாணவச் செல்வங்களை அறிவுடன்கூடிய மதவொழுக்கப்பண்பாடுகளைப் போதிக்கும் அஹதிய்யா பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க கரிசனை காட்டவேண்டும்…. என்றார்
(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *