சென்னை சா்வதேச விமான நிலையத்தில் 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் பறிமுதல்..! இலங்கையை சேர்ந்த ஒருவர் கைது ..!
சென்னை சா்வதேச விமான நிலையத்தில், கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கதீ நூதன முறையில் கடத்திய கும்பலை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா்.
இது குறித்து விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் சீனிவாச நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:
சென்னை சா்வதேசவிமான நிலையத்தில், தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அண்ணா பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள ஏா்ஹப் கடையின் விற்பனையாளரை சென்னை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் விசாரணை நடத்தினா். அப்போது அவா் மலக்குடலில் மறைத்து வைத்து 3 சிறு பண்டல்களில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் இலங்கையைச் சோ்ந்த கடத்தல்காரா்கள் சா்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் யூடிபா் சபீா் அலி என்வரின் உதவியோடு வித்வேதா பி.ஆா்.ஜி ஏா்ஹப் கடையை வாடகைக்கு எடுத்தது அதன் மூலம் கடத்தல்காரா்கள் தொடா்ந்து இதுபோன்று மலக்குடலில் வைத்து கடந்த 2 மாதங்களில் ரூ. 167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தியது தெரிய வந்தது.
இது தொடா்பாக இலங்கை பயணி ஒருவா்,கடை உரிமையாளா் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோா் அடங்கிய கும்பலை கைது செய்யத அதிகாரிகள் பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனா்.
(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)