உள்நாடு

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பற் சிகிச்சை முகாம்..!

மாணவர்களின் பற் சுகாதாரத்தை பேணும்  நோக்கில் கல்முனை தெற்கு பொதுச் சுகாதாரப் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பற் சிகிச்சை முகாம் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  இடம் பெற்றது.
பொதுச் சுகாதார வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .ஏ. ஆர். எம்.அஸ்மி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம் முகாமில், பற்சுகாதார நிபுணர் டாக்டர் திருமதி. எம். ஆர். எஃப். சுர்பா, பற் சுகாதார அதிகாரி டாக்டர் திருமதி பரிஹா, மற்றும், பொது சுகாதார தலைமை பரிசோதகர் . ஏ.எம் பாறுக்.பொது சுகாதார பரிசோதகர் .ஏ.எம். ஜுனைட் ஆகியோரும் இணைந்து மாணவர்களின் பற்சுகாதாரம் தொடர்பான பரிசோதனைகளிலும், விழிப்புணர்வுச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.
(எம்.எம்.ஜெஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *