உள்நாடு

முஸ்லிம் மீடியா போர மாநாட்டில் உதயம் பத்திரிகை மற்றும் உதயம் இணையத்தள செய்தி ஆசிரியர் ஸிராஜ் எம்.ஸாஜஹானுக்கு கெளரவம்.எமது ஆசிரிய பீட வாழ்த்துக்கள்

நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஊடகத் துறைக்கும் ஆற்றிய பங்களிப்புக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 வது வருடாந்த மாநாட்டின் போது கெளரவிக்கப்பட்டனர்.

இதன் போது உதயம் பத்திரிகை மற்றும் உதயம் இணையத்தள செய்தி ஆசிரியர் ஸிராஜ் எம்.ஸாஜஹான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் பொன்னாடை போர்த்தப்பட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்றூ பிராங்கினால் விருது வழங்கி கெளரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.

(ஏ.எஸ்.எம். ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *