உள்நாடு

பாதுக்க கலகெதர முஸ்லிம் வித்தியாலயத்திற்கு ஸ்ரீலங்கா ஹிமா இஸ்லாமிக் சேவிஸ் நிறுவனத்தின் ஊடாக இரண்டு மாடி வகுப்புகளுக்கான கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம்..!

பாதுக்க கலகெதர முஸ்லிம் வித்தியாலயத்திற்கு குவைத் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா ஹிமா இஸ்லாமிக் சேவிஸ் நிறுவனத்தின் ஊடாக இரண்டு மாடி வகுப்புகளுக்கான கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் கல்லுாாியின் அதிபர் எம்.எம்.எம். நவாஸ் தலைமையில் கல்லுாாியில் 29.06.2024 நடைபெற்றது

இந் நிகழ்வுக்கு குவைத் தூதுவரின் பிரதிநிதியாக கொழும்பில் உள்ள குவைத் தூதுவராலயத்தின் அதிகாரி அஷ்சேக் எம்.பிர்தௌஸ் (நளிமி) கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். அத்துடன் ஸ்ரீலங்கா ஹிமா இஸ்லாமிக் சேவிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஏ.ஏ நுாறுல்லாஹ் (நளிமி ) மற்றும் இவ் நிறுவனத்தின் தலைவர் அமீனுள்ளா,பாதுக்க பள்ளிச் சங்க உப செயலாளர் எம்.எஸ்.எம். சவ்பான் , கோமாகம பிரதேச கல்வி அதிகாரி, பாதுக்க பிரதேச செயலாளர், பாதுக்க பிரதேசத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, திஹாரிய அல் அஸ்கர் பாடசாலையின் அதிபர் ஏ.ஜே.எம்.புர்கான் உட்பட பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றார்கள் மாணவர்கள் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *