விளையாட்டு

கல்முனை வலய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை கரம்(Carrom) அணி..!

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் 20 வயதுப்பிரிவு பெண்கள் கரம்(Carrom) அணியினர் கல்முனை வலய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு  வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
 கல்முனை வலயமட்ட பெரு விளையாட்டு கரம்(Carrom) Under-17 மற்றும் 20 வயதிற்குட்பட்ட ஆண் ,பெண் இருபாலருக்குமான  போட்டிகள் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது
கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக பங்குபற்றிய  அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் 20 வயதுப்பிரிவு பெண்கள் கரம்(Carrom) அணி தங்கப்பதக்கம் பெற்று சம்பியனாகவும் 17 மற்றும் 20 வயதுப்பிரிவு ஆண்கள் கரம் அணியினர் வெள்ளிப்பதக்கங்ளும் வென்று 3 அணிகள் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *