Saturday, October 5, 2024
Latest:
உள்நாடு

காலநிலை மாற்றத்தை வெற்றிகொள்ளும் பெண் தொழில் முயற்சியாளர்கள் தொடர்பான கலந்துறையாடல்

கொழும்பு பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்ளும் பெண் தொழில் முயற்சியாளர்கள் எனும் தொணிப்பொருளில் தொழில் செய்யும் பெண்களின் அபிவிருத்தி தொடர்பிலான காலநிலை நிதியாலுகை தொடர்பான கலந்துறையாடல் இன்று (02) கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடல் நிகழ்வு கல்பிட்டி பிரதேச செயலாளர் சமில ஜெயசிங்வின் தலைமையில் , உதவித் திட்டமிடல் பணிப்பாளர் நிஸந்த தேசப்பிரியவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இக் கலந்துறையாடல் நிகழ்வின் பேச்சாளர்களாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களான ரஞ்சன ப்ரியதாஸ்ஸ மற்றும் பேராசிரியர் சமிரி ஹேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதில் உரையாற்றிய பேராசிரியர் ரஞ்சன ப்ரியதாஸ்ஸ குறிப்பிடுகையில், ” தற்போதைய திடீர் காலநிலை மாற்றத்தால் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இப் பின்னடைவிலிருந்து அக் குடும்ங்களையும் , நாட்டையும் முன்னேற்றும் செயல்திட்டத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். அதனால் உங்களைப் போன்ற பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளோம்.

மேலும் இத் திடீர் காலநிலை மாற்றங்களால் பாதிப்படைந்துள்ள குறிப்பாக பெண்கள் செய்கின்ற தொழில்களான கருவாட்டுத் தொழில், விவசாயம், பூக்கள் விவசாயம் போன்ற தொழில்துறைகள் பாதிப்படைந்துள்ளது. அவர்களை இனம் கண்டு அவர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு முடியுமான பங்களிப்பை செய்வதே இதன் பிரதான நோக்கமாகும். மேலும் இதற்கு கல்பிட்டிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, கண்டல்குளி குடாவ, முதலைப்பாளி, நுரைச்சோலை மற்றும் நாரக்கள்ளி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.” என்றார்.

மேலும் இப் பிரதேச தேசிய ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்கள் அத்துடன் முகநூல் ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருந்தார். இந்நிகழ்வில் இச் செயல்திட்டத்தின் கல்பிட்டிப் பிரதேச ஒருங்கினைப்பாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ரியான், கல்பிட்டிப் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இக் கலந்துறையாடலின் பின்னர் பேராசிரியர்கள் இருவரும் பிரதேச ஊடகவியலாளர்களை சந்தித்துக் கலந்துறையாடியதுடன் இச் செயல்திட்டம் வெற்றிபெற அவர்களின் பங்களிப்பையும் பங்கேற்பையும் எதிர்பாத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்ததுடன்ஊடகவியலாளர்களும் இம் முயற்சிக்குக் ரைம் கொடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *