விளையாட்டு

ஓட்டமாவடி நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் புதிய உதைபந்தாட்ட சீருடை அறிமுக நிகழ்வும் ,அறிமுக உதைபந்தாட்ட போட்டியும்..!

ஒட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் நடைபெற்ற ஓட்டமாவடி உதைபந்தாட்ட லீக் ஏ டிவிஷன்  சுற்று தொடரின் இரண்டாவது போட்டியில் ஓட்டமாவடி வளர் பிறை விளையாட்டு கழகத்தினை எதிர்த்து ஓட்டமாவடி  நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் உதைபந்தாட்ட போட்டியில் ஈடுபட்டது.

இந்த போட்டி நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக போட்டியாகவும் அமைந்து இருந்தது.
 மேற்படி  போட்டியில்  நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சுற்று தொடரின் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து கொண்டது.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *