உள்நாடு

இவ்வாண்டின் தேசிய மீலாத் – துன் நபி விழா இரத்தினபுரியில்

எதிர்ரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய மீலாத் – துன் நபி விழா இரத்தினபுரி அல்மாகியா முஸ்லிம் கல்லூரியில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்படி, இந்த தேசிய சமய விழாவை நடத்துவது தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இரத்தினபுரி மாவட்ட மௌலவிகளின் பங்குபற்றுதலுடன் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்/மாவட்ட அரசாங்க அதிபர் திரு.வசந்த குணரத்ன தலைமையில் இன்று (2024.07.02) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் நிகழ்வின் ஏற்பாடு குறித்து ஆலோசித்து தேவையான முடிவுகளை எடுப்பதாகும். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் தேசிய மீலாத் – துன் நபி விழாவை ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமான முறையில் நடத்துகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (மத அலுவல்கள்) எச்.எம். குமாரி, இரத்தினபுரி மாவட்ட மேலதிக செயலாளர் கயானி ஐ. கருணாரத்ன, மேலதிக மாவட்ட செயலாளர் அமில விஜேரத்ன, புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அசங்க ரத்நாயக்க, முஸ்லிம் சமய அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான அல அஹமட், என். நிலூஃபர் உட்பட அரச அதிகாரிகள் குழு, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்ட செயலகம்/ அரசாங்க தகவல் திணைக்களம்,
இரத்தினபுரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *