ரியாத் ஆளுநரும்-இலங்கை தூதுவரும் சந்திப்பு!
சவூதி அரேபியா – ரியாத் ஆளுநர் பைசல் பின் பந்தர் பின் அப்துல் அஸீஸ் மற்றும் சவூதிக்கான – இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் – சவூதி அரேபியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து இதன்போது மிக நீண்ட கலந்துரையாடலை இருவரும் மேற்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
2030 எனும் சவூதி அரேபியாவின் இலக்குடன் #பங்காளியாக இருக்க இலங்கை தயார் நிலையில் உள்ளது என்பதை இந்த சந்திப்பின் போது – தூதுவர் அமீர் அஜ்வத் எடுத்துரைத்தார்.