உள்நாடு

முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கெளரவிக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27வது மாநாட்டின்போது பின்வரும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் போரத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

சன்டே ஜலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் -மெனிக் டி சில்வா, ஆசிரியை , இ.ஒ.ப.கூட்டுத்தாபன தயாரிப்பாளர் அறிவிப்பாளர் புர்கான் பீ.இப்திகார், வீரகேசரி,பாராளுமன்ற செய்தியாளர் எம்.எஸ்.அமீர் ஹூசைன், வசந்தம்,தொலைக்காட்சி ,வசந்தம் வானொலி தமிழ் செய்தி பொறுப்பாசிரியர் சித்தீக் ஹனீபா, பிறை எப்.எம். வானொலியின் பிரதிப் பணிப்பாளர் பசீர்.அப்துல் கையும், தினகரன் முன்னாள் இணை ஆசிரியர், சுஜப்.எம். காசீம், தினகரன் முன்னாள் விளையாட்டு செய்தி ஆசிரியர்.நவமனி, உதயம் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஸிராஜ் எம். ஸாஜஹான், மாத்தரை கொடப்பிட்டிய ஆசிரியர் பிராந்திய ஊடகவியாளர் எம்.எம்.எம். பஷீர், தகவல் உரிமைச் சட்டத்தினை வினைத்திறனாக பயன்படுத்தியமைக்கான ஊடகவியல் பயிற்சிநெறி பயிற்றுவிப்பாளர் விடியல் இணையத்தளத்தின் ஆசிரியர் றிப்தி அலி ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜக்கிய நாடுகள் இலங்கைகான இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரு பிராண்ஸ், கெளரவ அதிதியாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான துாதுவர் கலாநிதி அலிராசா டெல்க்கோஸ், பிரதான பேச்சாரள் இந்திய முஸ்லி லீக்கின் பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கே.ஏ.எம். முஹம்மத் அபுபக்கர், பிரதான பேச்சாளராக சமுக சேவையாரள் எம்.எல்.எம். மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமேல் ஆளுநர் நசீர் அஹமட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம். ஏ.எச்.எம். பௌசி (பா.உ) முன்னாள் கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பா. உ ரஜப்தீன், இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் ஊடகச் செயலாளர் பானு எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலைவர் குமார் நடேசன் மீடியாபோரத்தின் பொருளார் எம்.எம்.ஜெஸ்மின், செயலாளர் சிஹார் அனீஸ் ஆகியோர்கள் உட்பட இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என மண்டபம் நிறைந்து உறுப்பிணர்கள் காணப்பட்டனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *