தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்திய சாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (30) இரவு 9.00 மணியளவில் காலமானதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரா. சம்பந்தன், சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 91 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரா. சம்பந்தன், இலங்கை அரசியலிலும் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் வாழ்விலும் முக்கியமாக பேசப்பட்டு வந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )