மள்வானை அல் முபாரக்கில் பெளஸுல் ஜிப்ரி ஆசிரியர் விடுதி திறப்பு
மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் பாடசாலையின் பழைய மாணவரும் பிரபல தொழிலதிபருமான கலாநிதி அல்-ஹாஜ் பௌசுல் ஜிப்ரி அவர்களின் சொந்த நிதியொதுக்கீட்டில் சுமார் 55 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட குறித்த ஆசிரியர் விடுதிகள் தொகுதி நேற்று 29 சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் கடந்த ஆண்டு இடம்பெற்ற பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வின் போது இதற்கான அடிக்கல் நடப்பட்டது சுமார் 9 மாதங்களில் குறித்த வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டதோடு பாடசாலை அதிபர் முஹம்மத் நயீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பலஸ்தீன மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் இமாம் அலி அல் அப்பாசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் கௌரவ அதிகளாக ஜனாதிபதி ஆலோசகர் முன்னால் பதுகாப்பு ராஜாங்கமைச்சர் ருவன் விஜயவர்தன,முன்னல் ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ,ஜிப்ரி ஹாஜியாரின் புதல்வர் அல்-ஹாபிழ் பாஸில் ஜிப்ரி ,மருமகன் முஹம்மத் செய்த் ,மற்றும் நீதியரசர் அல்-ஹஜ் அப்துல் கபூர் ,தொழிலதிபர்களான ஏ.ஆர்.எம் .லாபிர் ஹாஜியார் ,முஹம்மத் அப்துல் காதர் ஹாஜியார் ,பலஸ்தீன முன்னால் தூதுவர் பௌஸான் அன்வர் ,அல்-ஹாஜ் ரிஷாம் அஹமட் ஆகியோர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் ,மற்றும் கல்வி அதிகாரிகள் ,பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரமுகர்கள் நலன்விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்
குறித்த விடுதித்தொகுதியனது ஒரு விடுதியில் நான்கு ஆசிரியர்கள் தங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு இவ்வாறான 6 விடுதிகள் அமைக்கப்பட்டுவருகின்றது
இதன் மூலம் எதிர்காலத்தில் தலைசிறந்த ஆசிரியர்களை பாடசாலைக்கு உள்வங்க வேண்டும் எனவும் அதற்கான சகல ஏற்படுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் கலாநிதி பௌசுல் ஜிப்ரி அவர்கள் அவர்களின் உரையில் தெரிவித்தார்
கலாநிதி ஹிஸ்புல்லா அவர்களின் உறையின் போது எதிர்காலத்தில் புனானை சர்வதேச தொழிநுட்ப பல்கலைக்கலகத்துடன் இணைத்து எதிர்காலத்தில் 10 மாணவர்களை இலவசமாக அங்கு உள்வாங்க ஏற்பாடுகள் செய்வதாக குறிப்பிட்டார் .
ருவன் விஜயவர்தன அவர்கள் உரையாற்றும் போது இவ்வாறானதொரு சகல வசதிகளுடன் கூடிய ஆசிரியர் விடுதியை இவ்வாறானதொரு பாடசாலையின் பழைய மாணவரும் சர்வதேச வர்தகருமான கலாநிதி பௌசுல் ஜிப்ரி அவர்கள் போன்ற ஒருவரால் அமைக்கப்பட்டமையை வரவேற்று உரையாற்றினார் மேலும் ஜனாதிபதி அவர்களால் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது கூறப்பட்ட பாடசாலைக்கான சகல வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம் அமைப்பதற்கான ஏற்படுகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்
பாடசாலையின் அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்சங்கத்தால் கலாநிதி பௌசுல் ஜிப்ரி மற்றும் கலாநிதி ஹிஸ்புல்லா ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
(எம்.ஆர்.லுதுபுள்ளாஹ் – கஹட்டோவிட்ட)