விளையாட்டு

சர்வதேச ரி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் கிங் கோஹ்லி

9ஆவது ரி20 உலக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை இந்திய அணி 7 ஓட்டங்களால் வீழ்த்தி 2ஆவது முறையாகவும் உலகக்கிண்ணத்தை தனதாக்கியிருக்க இறுதிப் போட்டியில் பொருப்புடன் ஆடடி விராட் கோஹ்லி 73 ஓட்டங்களை விளாசி இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வெற்றி கொண்டதுடன் இது தான் இந்தியாவிற்காக எனது இறுதி ரி20 போட்டி என்றார்.

35 வயதான விராட் கோஹ்லி கிரிக்கெட் உலகின் தற்கால துடுப்பாட்ட அரசனாக வலம் வருகிறார். இதுவைரையில் 125 சர்வதேச ரி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள கோஹ்லி 48.69 என்ற சராசரியுடன் 38 அரைச்சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்களாக 4188 ஓட்டங்களை விளாசியுள்ளார். மேலும் உலகக்கிண்ண தொடர் ஆரம்பிக்க முன்னர் கோஹ்லி இந்தியக் குழாத்தில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இருப்பினும் தேர்வுக் குழு அவரை உலகக்கிண்ண தொடருக்கு இணைத்திருந்தது.

இருப்பினும் இந்திய அணிக்காக ரோஹித் சர்மாவுடன் ஆரம்ப வீரராக களம் களம் நுழையும் கோஹ்லி இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தத் தவறினார். இதனால் பெரும் விமர்சனம் வந்த நிலையில் கோஹ்லி தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் பொருப்புடன் துடுப்பெடுத்தாடி பெருமதியான 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வெற்றி கொண்டார்.

பலவகையான விமர்சனங்களுக்குதன் துடுப்பாட்ட மட்டையால் பதிளலிக்கும் கோஹ்லி இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை கையில் பெற்றுக் கொண்டு குறிப்பிடுகையில் ” இது எனது இறுதி உலகக்கிண்ணம். அத்துடன் இந்த உலகக்கிண்ண சம்பியன் மகுடத்தைத் தான் நாங்கள் அடைய விரும்பினோம். அத்துடன் இளம் வவீரர்களுக்கான ஆட்டம் இது, இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி ரி20 சர்வதேசப் போட்டி இதுதான்.” என்றார் துடுப்பாட்ட சிங் விராட் கோஹ்லி.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *