விளையாட்டு

சம்பியன் நாமத்துடன் விடைகொடுத்த மூவ்வேந்தர்களும், ட்ராவிட்டும்

9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று 17 வருடங்களின் பின்னர் ரி20 உலகக்கிண்ணத்தை தனதாக்கியிருக்க இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோஹ்லி , அணித்தலைரான ரோஹித் சர்மா மற்றும் சகலதுறை நட்டசத்திரமான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச ரி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவந்த 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணி , தென்னாபிரிக்க அணியை 7 ஓட்டங்களால் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இப் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி பெருமதியான 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கியிருந்தார்.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்றுக் கொண்ட கோஹ்லி குறிப்பிடுகையில் ,”இந்த உலகக்கிண்ணத் தொடர்தான் எனது இறுதி உலகக்கிண்ணத் தொடர். அத்துடன் ரி20 போட்டிகள் இளம் வீரர்களுக்கானது. மேலும் இந்தப் போட்டிதான் எனது இறுதி சர்வதேச ரி20 போட்டியாகும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்து விடைபெறுகிறேன்.” என்றார். இதுவரையில் 125 சர்வதேச ரி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள கோஹ்லி 48.69 என்ற சராசரியுடன் 38 அரைச்சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்களாக 4188 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய இறுதிப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்கள் நிறைக்கு வந்ததன் பின்னர் இந்திய அணியின் தலைவரான ரோஹித் சர்மாவும் சர்வதேச ரி20 போட்டிகளில் இருந்து ஓய் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய அணி இவ் உலகக்கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் தடுமாறிய வேளைகளில் தனி ஆளாய் அதிரடியில் அணிக்கு ஓட்டங்களைச் சேர்த்துக் கொடுத்திருந்த ரோஹித், களத்தடுப்பு வியூகங்கள் மற்றும் பந்துவீச்சு பறிமாற்றம் ஆகியவைகளை நேர்த்தியாகச் செய்து இந்திய மக்களின் 17 வருட கனவை நேற்றைய தினம் நனவாக்கிக் கொடுத்திருந்தார்.

இறுதிப் பந்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் மைதானத்தில் விழுந்து கண்ணீர் மழ்க வௌற்றியைக் கொண்டாடினார் ரோஹித். 37 வயதான ரோஹித் குருநாத் சர்மா இதுரையில் 159 ரி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 32.05 என்ற ஓட்ட சராசரியுடன் 32 அரைச்சதங்கள் மற்றும் 5 சதங்கள் அடங்களாக 4231 ஓட்டங்களை விளாசியுள்ளார். மேலும் அதிரடியால் வானவேடிக்கை காட்டி இந்திய ரசிகர்கள் மாத்திரமின்றி உலகலாவிய கிரிக்கெட் ரசிகர்களும் இனி ரோஹித் இல்லாத சர்வதேச ரி20 போட்டிகளை காணவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினத்துடன் தானும் சர்வதேச ரி20 போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். இந்நிய அணியின் பந்துவீச்சு , துடுப்பாட்டம் மாத்திரம் இன்றி களத்தடுப்பிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஜடேஜா இம்முறை உலகக்கிண்ணத் தொடரில் எதிர்பார்த்த அடைவினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் அக்ஷர் படேல் சிறப்பாகப் பிரகாசிக்க எதிர்காலத்தில் ஜடேஜாவின் நிலை கேள்விக்குறியாகலாம் என கருத்துக்கள் வெளியாகியிருந்தது.

இதனால் இன்றைய தினம் தான் சர்வதேச ரி20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக ஜடேஜா அறிவித்துள்ளார். 35 வயதான ரவீந்ரசிங் அனிருத்சிங் ஜடேஜா இதுவரையில் 74 சர்வதேச ரி20 போட்டிகளில் பங்கேற்று 21.45 என்ற சராசரியுடன் 515 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் 54 விக்கெட்டுக்களையும் தன் மாயாஜால சுழலால் அள்ளிச் சுருட்டியுள்ளார். களத்தடுப்பில் 28 பிடிகளையும் எடுத்து முத்துறைகளிலும் இந்திய அணியின் வெற்றியின் பங்குதாரராக இருந்துள்ளார் ஜடேஜா.

இம் முவ்வேந்தர்களுடன் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுந்த ராகுல் ட்ரரிட் நேற்று நிறைக்கு வந்த இறுதிப் போட்டியுடன் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விடைகொடுத்துள்ளார். இதுகுறித்து ட்ராவிட் குறிப்பிடுகையில் , ”ஒரு வீரராக உலகக்கிண்ணம் வெல்லும் அதிஷ்டம் எனக்கு இல்லை. ஆனால் விளையாடும் போதெல்லாம் என்னால் முடிந்தவரை முயன்றேன். ரோஹித் தலைமையிலான இவ் வீரர்கள் இதைச் சாத்தியமாக்கியதில் நான் அதிஷ்டசாலி. ரோஹித் மற்றும் இந்த வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது பிடித்திருந்தது.” என்றார் ராகுல் ட்ராவிட்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *