உள்நாடு

கஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹீமிய்யாவின் 97 வது வருடாந்த மனாகிப் ஷாதுலி நிகழ்வு இன்று ஆரம்பம்

அல் குத்துபுல் அக்பர் அஷ் செய்த் அபுல் ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலி (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஞாபகார்த்தமாக வருடாந்தம் நடைபெற்று வரும் 97 வது வருட மனாகிப் ஷாதுலி நிகழ்ச்சி 2024.06.30 இன்று முதல் 2024.07.06.ஆம் திகதி வரை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹிமியா ஷாவியாவில் நடைபெறவுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

சுமார் ஒரு வார காலம் இடம்பெறவுள்ள குறித்த மனாகிப் நிகழ்வை தொடர்ந்து மனாகிப் தமாம் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எம்.ஆர்.லுதுபுள்ளாஹ் – கஹட்டோவிட்ட)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *