உள்நாடு

புத்தளம் எலுவன்குளம், மறிச்சிக்கட்டி ஊடான பாதை திறப்பு கலந்துரையாடல்

புத்தளம் எலுவன்குளம் மறிச்சிக்கட்டி ஊடான பாதை திறப்பு சம்பந்தமான திறந்த கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (28) புத்தளம் பாலாவி அஸ்னா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடல் அஷ்ஷெஹ் தௌபீக் மதனியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகி வைத்தியர் தஸ்லீமின் தலைமையுரையில் இந்த பாதையை பயணிப்பதற்கு உபயோகிக்க கையாளப்பட வேண்டிய உத்திகளையும் அதற்கான ஒத்துழைப்புக்களையும் சகலரும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன் கிருலப்பனையில் இருந்து வருகை தந்த பௌத்த மதத் தலைவர் சங்கைக்குரிய விஜய கீர்த்தி கருத்து தெரிவிக்கையில் “தைரியமான சமூகமாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்.” என்ற கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து கலாநிதி நிஹ்மத்துல்லாஹ், கலாநிதி தமீம், மூத்த கல்விமான் பொறியியலாளர் புர்ஹானுத்தீன் மற்றும் நிப்ராஸ் ஆகியோர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மேற்படி புத்தளம் எலுவன்குளம், மறிச்சிக்கட்டி ஊடான பாதை திறப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஜுலை மாதம் பாதையின் இரு முனைகளில் இருந்தும் மேற்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான இரு குழுக்களும் நியமிக்கப்பட்டதாக தற்காலிக ஒருங்கிணைப்பாளர் ஏ .எஸ் சாஹீர் அறிவித்துள்ளார்.


(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *