“பாரம்பரியம்” நிகழ்ச்சியில் கல்வியாளர் எம்.எச்.எம். ஹஸன்
முஸ்லிம் சேவைக்கு பங்களிப்புச் செய்தோர் வரிசையில், எதிர்வரும் 2 ஆம் திகதி (02.07.2024) செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் “பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடர்” நேர்காணலில் அல்ஹாஜ் எம்.எச்.எம். ஹஸன் அதிதியாக பங்கேற்கிறார்.
ஸ்ரீலங்கா ஜமா – அத்தே இஸ்லாமி உதவிச் செயலாளரான இவர், பேராதனைப் பல்கலைக் கழக கலைத்துறை, கல்வி முதுமாணி பட்டங்கள் பெற்றவராவார். முஸ்லிம் சேவையோடு மிக நீண்ட கால தொடர்புபட்டிருந்த ஹஸன், எழுத்தாளரும், இலக்கியவாதியுமாவார்.
இவர், சிங்கள மொழி நாவல்கள் பல தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளார். முஸ்லிம் சேவையில் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டு வரை வாராந்தம் சுமார் எட்டு வருடங்களாக “மாணவர் மன்றம்” நிகழ்ச்சி நடத்தியதோடு, இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
“பாரம்பரியம்” நிகழ்ச்சியை, எம்.எஸ்.எம். ஜின்னாஹ் தொகுத்து வழங்க, முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா ரினூஷியா தயாரித்தளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )