நுரைச்சோலை சிங்கள பாடசாலைக்கு கற்றல் உபகரணம் மற்றும் உள்ளக பாதை அடிக்கல் நாட்டும் விழா
நுரைச்சோலை இலந்தையடி சிங்கள மகா வித்யாலயத்திற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் உள்ளக பாதைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அன்மையில் பாடசாலையின் அதிபர் டப்யூ.கே.எல்.எஸ் தமேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் மற்றும் விசேட அதிதிகளாக நுரைச்சோலை அமைப்பாளர் ஹஸீப் நிஜாம், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தீன், இணைப்புச் செயலாளர் எச் அமீர் அலி ஆசிரியர், ஊடக செயலாளர் எம் எம் நௌஃபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் தொகுதிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் இல்லாததால் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பாகவும், விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மாவட்டத்திற்கு உள்ளேயே பிரிவினைகள் ஏற்பட்டது தொடர்பாகவும் அரசியல்வாதிகள் தமது சொந்த இலாபங்களுக்காக மக்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியன இணைந்து இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்க்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)